100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை விடுவித்தது ஒன்றிய அரசு..!! மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்…!!
இந்தியாவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, வறுமையை ஒழிப்பதை நோக்கமாக கொண்டு, மத்திய அரசு 2005 ஆம் ஆண்டு “மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை” உருவாக்கியது. இத்திட்டத்தின் கீழ், ஊரக வேலைவாய்ப்பு அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும், ஆண்டுக்கு நிச்சயம் 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கும் உத்திரவாதத்தை இத்திட்டம் அளிக்கிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ் சுமார் 14.35 கோடி பேர் செயல் தொழிலாளர்களாக உள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு இத்திட்டத்திற்கான தமிழக நிதியை விடுவிக்காமல் இருந்ததற்காக திமுக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இல்லத்தரசிகளுக்கு ஒரு குட் நியூஸ்…!! அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை..!! அதுவும் இவ்வளவா..?
இந்நிலையில், உழைப்பாளர் தினமான இன்று இத்திட்டத்திற்கான நிதியான ரூ.4,034 கோடியில், இருந்து முதற்கட்டமாக ரூ 2,999 கோடியை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது. மேலும், மீதமுள்ள ரூ 1,246 கோடியையும் மத்திய அரசு விரைவில் விடுவிக்கும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனால் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


























