சம்பள கணக்கில் PF வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – உமாங் செயலி அறிமுகம்!

1
சம்பள கணக்கில் PF வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - உமாங் செயலி அறிமுகம்!
சம்பள கணக்கில் PF வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - உமாங் செயலி அறிமுகம்!
சம்பள கணக்கில் PF வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – உமாங் செயலி அறிமுகம்!

பிஎஃப் கணக்கு குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள உமாங் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சந்தேகங்கள் மற்றும் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது.

உமாங் செயலி:

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் பலரும் பிஎஃப் குறித்த சந்தேகங்கள், மற்றும் விவரங்களை அறிந்து கொள்வதில் பல சிக்கல்களை மேற்கொண்டு வருகின்றனர். அதை போக்கும் வகையில் பிஎஃப் குறித்த விவரங்களை அறிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தம்? 70 வயதிற்கு பின்? உண்மை நிலவரம்!

உமாங் என்னும் செயலியை பயன்படுத்துவதன் மூலம் பிஎஃப் குறித்த விவரங்கள், சந்தேகங்கள், சேவைகள் முதலியனவற்றை தெரிந்து கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்தும் விதம் குறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த செயலியில் பிஎஃப் பாஸ்புக் பார்ப்பது, கடைசி வரை டெபாசிட் செய்யப்பட்ட தொகை, நாள் முதலியனவற்றை கண்டறிய முடியும். மேலும் UAN ஆக்டிவேட் செய்வது, UAN அலோட்மெண்ட், கோவிட்-19 கோரிக்கை எழுப்புவது, 10C படிவம் பெறுவது முதலியனவற்றை காணலாம்.

அஞ்சல் உதவியாளர், பிரிப்பு உதவியாளர் & ஆய்வாளர்கள் பணி நியமனம் – கோரிக்கை முன்வைப்பு!

PF கணக்கு விவரங்களை மெசேஜ் மற்றும் மிஸ்டு கால் மூலம் பெறும் சேவைகளையும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. மேலும் நிறுவனம் சார்ந்த சேவைகளான ரெமிட்டன்ஸ் சேவை மற்றும் பென்ஷன் முதலியன தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது. பாஸ்புக் பார்ப்பது, ஜீவன் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வது, கட்டண ஆர்டரை டவுன்லோடு செய்வது முதலிய வசதிகள் உள்ளன. அதனை தொடர்ந்து புகார்கள் மற்றும் சந்தேகங்களை கேட்கலாம். இதற்கு கோரிக்கைகளை பொறுத்து அதற்கேற்ப பதில் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍😍👇👇🤩👇👇👇👇👇👇👇👇🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!