‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவிற்கு பதில் புது நடிகர் அறிமுகம் – ‘ரோஜா’ சீரியலில் நியூ என்ட்ரி!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஜீவாவிற்கு பதில் புது நடிகர் அறிமுகம் - 'ரோஜா' சீரியலில் நியூ என்ட்ரி!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஜீவாவிற்கு பதில் புது நடிகர் அறிமுகம் - 'ரோஜா' சீரியலில் நியூ என்ட்ரி!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவிற்கு பதில் புது நடிகர் அறிமுகம் – ‘ரோஜா’ சீரியலில் நியூ என்ட்ரி!

சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது, ரோஜா தான். இந்த சீரியலில் தற்போது புதிய அஸ்வினாக யார் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ரோஜா சீரியல்:

மக்கள் இன்று அதிகமாக விரும்பி பார்ப்பது சீரியல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தான். அந்த வகையில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இரண்டும் போட்டி போட்டு கொண்டு சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சன் தொலைக்காட்சியில் எப்போதுமே டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது, ‘ரோஜா’. பல விறுவிறுப்பான கட்டங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ரோஜாவின் அம்மா செண்பகம் பழைய விஷயங்களை மறந்து விடுகிறார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் செய்த புதிய சாதனை – 600 எபிசோடுகள்! ரசிகர்கள் உற்சாகம்!

அவருக்கு பழைய விஷயங்களை நியாபகப்படுத்த குடும்பத்தினர் போராடி வருகின்றனர். ரோஜா தான் அவரது மகள் என்று எப்போது அவர் கூறுவார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக காத்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், அஸ்வின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் வெங்கட் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. நடிகர் வெங்கட் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திடிரென்று இவர் ரோஜா சீரியலில் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மாவின் இறுதி நாள் படப்பிடிப்பு – மீனா வெளியிட்ட யூடுப் வீடியோ!!

அதனை நடிகர் வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக உறுதி செய்தார். தான் விலகுவதற்கான காரணத்தை அவர் தெரிவிக்காத போதும், அவர் தான் விலகியது உறுதி என்று கூறியுள்ளார். இப்படியாக இருக்க, இனி ‘ரோஜா’ சீரியலில் இருக்கும் அஸ்வின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. இந்த சந்தேகத்தினை தீர்க்கும் விதமாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பவர் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வானத்தை போல’ மற்றும் ‘கோகுலத்தில் சீதை’ ஆகிய சீரியல்களில் நடித்து வரும் நடிகர் சன்கரேஷ் தான் இனி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!