பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மாவின் இறுதி நாள் படப்பிடிப்பு – மீனா வெளியிட்ட யூடுப் வீடியோ!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மாவின் இறுதி நாள் படப்பிடிப்பு - மீனா வெளியிட்ட யூடுப் வீடியோ!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மாவின் இறுதி நாள் படப்பிடிப்பு - மீனா வெளியிட்ட யூடுப் வீடியோ!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மாவின் இறுதி நாள் படப்பிடிப்பு – மீனா வெளியிட்ட யூடுப் வீடியோ!!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மாவாக நடித்து வந்த நடிகை ஷீலா, இறந்துவிட்டது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பில் அவரது இறுதி நாள் குறித்து அதே சீரியலில் மீனாவாக நடிக்கும் நடிகை ஹேமா வீடியோ ஒன்றை தனது யூடுப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ஷீலா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷீலா அவர் தற்போது இறந்து விடுவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. சீரியல் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நடித்த நிலையில் தற்போது அவர் கதாபாத்திரம் முடிவடைந்த நிலையில் அவர் இல்லாமல் சீரியல் நன்றாக இருக்காது என வருத்தத்துடன் சீரியல் நடிகர் நடிகைகள் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அதே சீரியலில் மீனவாக நடிக்கும் நடிகை ஹேமா தனது யூடுப் சேனலில் லட்சுமி அம்மாவின் இறுதிநாள் படப்பிடிப்பு விடியோவை பதிவிட்டுள்ளார்.

கண்ணன் சாப்பிட உட்கார சாப்பிடாமல் எழுந்த மூர்த்தி, கண்ணனை நினைத்து கவலையில் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அதில் லட்சுமி அம்மாவிற்கு டூப் போட கொண்டுவரப்பட்ட பொம்மையை காட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடிக்கும் கம்பம் மீனா உடன் வீடியோ எடுத்துள்ளார். அதில் அழுது அழுது கண்கள் எல்லாம் எரிகிறது என தெரிவித்துள்ளார். பின் லட்சுமி அம்மாவை காட்டிய அவர், அம்மாவும் நானும் தான் இந்த ரூமில் இருப்போம் இனிமேல் அம்மா இல்லாதது வருத்தமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகள் ஒரே ரூமில் இருந்துவிட்டு தற்போது இல்லாதது ஒரு மாதிரி இருக்கிறது எனதெரிவித்துள்ளார்.

கண்ணம்மாவை பாரதியிடம் இருந்து விவாகரத்து வாங்க சொல்லும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அதன் பின் பேசிய ஷீலா அம்மா, 18 ஆண்டு சீரியல் வாழ்க்கையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் எனக்கு நல்ல ரீச் கொடுத்தது என சொல்லிய அவர், சீரியலில் 3 ஆண்டுகள் இருந்துவிட்டு திடீரென முடிக்கப்பட்டது வருத்தமாக இருக்கிறது என தெரிவித்தார். ஆனால் விரைவில் வேறு ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஷீலா அம்மா சென்றது மிகவும் வருத்தமாக இருப்பதாக ஹேமா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!