கண்ணம்மாவை பாரதியிடம் இருந்து விவாகரத்து வாங்க சொல்லும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலி மாத்திரை போடலாமா வேண்டாமா என யோசிக்க சௌந்தர்யா மாத்திரை போட சொல்கிறார். பின் கண்ணம்மா பாரதியை விவாகரத்து செய்ய வேண்டும் என வெண்பா சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலி மாத்திரை போடலாமா வேணாமா என நினைத்து கொண்டிருக்க, வெண்பாவை யாருமே நம்பவில்லை நான் மட்டும் ஏன் நம்ப வேண்டும் என நினைத்து மாத்திரையை கையில் வைத்து கொண்டு யோசித்து கொண்டிருக்கிறார். இந்த மாத்திரை போட்ட பின் தான் வலி அதிகமாகிறது அதனால் மாத்திரை போட வேணாம் என நினைக்க ஆனால் இது பாரதி மாமா கொடுத்தது தான என நினைத்து பார்க்கிறார். அப்போது அங்கே சௌந்தர்யா வருகிறார்.
உடனே அஞ்சலி பதட்டம் அடைய, ஏன் பதட்டமாக இருக்கிறாய் என கேட்கிறார். அஞ்சலி அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்ல கையில் என்ன என கேட்கிறார். மாத்திரையை காண்பிக்க, ஏன் எல்லாம் இரண்டு இரண்டாக இருக்கிறது என சௌந்தர்யா கேட்கிறார். வெண்பா தான் போட சொன்னால் என சொல்ல அவள் ஒரு ஆளு அவ பேச்சை கேட்கிறியா என சொல்லி ஒரு மாத்திரை போட சொல்கிறார். உடனே அஞ்சலி போட இப்போது வலி வருதா என பாப்போம் என நினைக்கிறார். நினைத்தது போல வலி வருகிறது.
முகப்பரு சிகிச்சை குறித்து மனம் திறந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகா – ரசிகர்கள் ஆதரவு!
ஒரு பக்கம் வெண்பா கண்ணம்மா நம்புகிறாளா இல்லையா என நினைத்து குழப்பத்தில் இருக்க, கண்ணம்மாவும் வெண்பா சொன்னது போல போன் செய்கிறார். ஆனால் வெண்பா எதுவும் கேக்காதது போல நடித்து போனை வைக்க, கோவத்தின் உச்சிக்கு சென்ற கண்ணம்மா நேராக வெண்பா வீட்டிற்கு சென்று கழுத்தை பிடித்து உனக்கு என்ன பிரச்சனை என கேட்கிறார். நீ சொன்னது போல போன் செய்தால் அதையும் வைத்து விடுகிறாய் என்ன தான் செய்ய சொல்ற என சொல்லி கழுத்தை நெரிக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய ‘ரோஜா’ சீரியல் – TRP ரேட்டிங்!
உடனே வெண்பா நான் செத்துட்டால் உன் குழந்தை பற்றி தெரியாமல் போய்விடும் என சொல்ல கண்ணம்மா விடுகிறார். இப்போ நான் என்ன செய்ய வேண்டும் என கண்ணம்மா கேட்க, இன்னும் பாரதியை நீ புருஷனாக தான் நினைக்கிறாய், பத்திரத்திலும் நீயும் அவனும் புருஷன் பொண்டாட்டி தான் என இருக்கு அதுனால நீ விவாகரத்து வாங்க வேண்டும் என சொல்கிறார். விவாகரத்து வாங்கினால் உன் பொண்ணை உன்னிடம் விட்டுவிடுவேன் என சொல்ல, கண்ணம்மாவும் சம்மதம் தெரிவிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.