விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் செய்த புதிய சாதனை – 600 எபிசோடுகள்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் செய்த புதிய சாதனை - 600 எபிசோடுகள்! ரசிகர்கள் உற்சாகம்!விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் செய்த புதிய சாதனை - 600 எபிசோடுகள்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் செய்த புதிய சாதனை - 600 எபிசோடுகள்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் செய்த புதிய சாதனை – 600 எபிசோடுகள்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது 600 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், அந்த வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

இன்றைய நவநாகரீக உலகில் பழைய பழக்க வழக்கங்கள், பேச்சுகள், உடைகள் உட்பட அனைத்தும் மாறி இருந்தாலும் மக்களிடயே இன்றும் மாறாத பழக்கமாக இருப்பது சீரியல்கள் பார்ப்பது தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் தான் சீரியல் பார்ப்பார்கள் என்ற நிலை தற்போது மாறி, அனைத்து வயதுடையவர்களும் பார்க்கக்கூடிய அளவுக்கு சீரியல்கள் மக்கள் மத்தியில் பேர்பெற்றுள்ளது. என்னதான் காலம் மாறி இருந்தாலும் பல சீரியல்களில் அதே மாமியார் மருமகள் சண்டை, குடும்பத்தை பழி தீர்க்கும் கதைகள் தான் காலகாலமாக இன்று வரையும் ஒளிபரப்பாக்கப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மாவின் இறுதி நாள் படப்பிடிப்பு – மீனா வெளியிட்ட யூடுப் வீடியோ!!

இருந்தாலும் இந்த கதைகளில் இருந்து மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்படும் சில சீரியல்கள் மக்களிடையே அதிகம் கவனம் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இன்றும் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் துவங்கிய இந்த சீரியல் தற்போது 600ஆவது எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

அதாவது குடும்பத்தால் வெறுக்கப்படும் கண்ணம்மாவை, பாரதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் கண்ணம்மாவின் நிறத்தை காரணம் காட்டி அத்தை சௌந்தர்யா அவரை வெறுக்கிறார். இதற்கிடையில் வெண்பாவின் சூழ்ச்சியால் பாரதி, கண்ணம்மாவை சந்தேகப்பட வீட்டை விட்டு வெளியேறுகிறார் கண்ணம்மா. இப்போது யாருடைய ஆதரவும் இன்றி ஒரு பெண் குழந்தையை தனி ஆளாக வளர்த்து வாழ்க்கையில் ஜெயித்து நிற்கிறார் கண்ணம்மா.

கண்ணம்மாவை பாரதியிடம் இருந்து விவாகரத்து வாங்க சொல்லும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

இது தான் பாரதி கண்ணம்மா சீரியலின் இதுவரை ஒளிப்பரப்பாகி இருக்கும் கதைக்களம் ஆகும். இதனுடன் அவ்வப்போது சில சண்டைகள், பிரிவுகள், காதல், மோதல் என மசாலா கலந்து தனது ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார் சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட். அந்த வகையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல், தற்போது 600ஆவது எபிசோடுகளை கடந்திருக்கிறது. இந்த வெற்றியை பாரதி கண்ணம்மா குழுவினருடன் சேர்ந்து அந்த சீரியலின் ரசிகர்களும் தற்போது உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!