மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தம்? 70 வயதிற்கு பின்? உண்மை நிலவரம்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தம்? 70 வயதிற்கு பின்? உண்மை நிலவரம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தம்? 70 வயதிற்கு பின்? உண்மை நிலவரம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தம்? 70 வயதிற்கு பின்? உண்மை நிலவரம்!

மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 70 முதல் 75 வயதுக்கு பிறகு ஓய்வூதியத்தை நிறுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக வெளியான தகவல் ஒன்று தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வூதியம் நிறுத்தம்

கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் பலரும் தங்களது அன்றாட ஆதாரங்களை இழந்து தவிக்கும் சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. ஏனென்றால் அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக 3% DR, கிராஜுவிட்டி, பணத்தொகை, வீட்டுப்படி போன்ற பல சலுகைகள் கொடுக்கப்பட இருக்கிறது. இதில் சில அறிவிப்புகள் வெளியாகி இருந்தாலும், அரசு ஊழியர்களுக்கு இன்னும் கூடுதல் சலுகைகளை அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

அஞ்சல் உதவியாளர், பிரிப்பு உதவியாளர் & ஆய்வாளர்கள் பணி நியமனம் – கோரிக்கை முன்வைப்பு!

இதற்கிடையில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 70 முதல் 75 வயதுக்கு பிறகு ஓய்வூதியத்தை நிறுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக பெங்காலி செய்தித்தாள் ஒன்று தகவல் அளித்துள்ளது. இது தவிர அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் தொகையில் ‘சஸ்பெண்ட்ஸ் அலவன்ஸ்’ என்ற பெயரில் 40 முதல் 60 சதவிகிதம் என்ற அளவில் மொத்த தொகை வழங்கப்படும் என்றும் DR கொடுக்கப்படாது எனவும் அந்த செய்தித்தாள் விளக்கம் கொடுத்துள்ளது.

TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – புதிய வழிமுறைகள்!

பெங்காலி நாளிதழின் இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி, மற்றொரு செய்தி வலைத்தளம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் 70 முதல் 75 வயதை கடந்தவுடன் அவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளது என்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. இப்போது இந்த ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள் போலியானவை என்பதை PIB Fact Check உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக PIB Fact Check, மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை இது போன்ற எந்தவொரு திட்டத்தையும் சிந்திக்க கூட இல்லை என்று ஒரு ட்விட்டர் பதிவின் மூலம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!