உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.. விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்படும்.. டிரம்ப் அறிவித்த முக்கிய தகவல்..!!

0
????????? ????? ?????? ?????????.. ???????? ???? ??????? ????????? ????????????.. ??????? ???????? ??????? ?????..!!
உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.. விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்படும்.. டிரம்ப் அறிவித்த முக்கிய தகவல்..!!

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.. விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்படும்.. டிரம்ப் அறிவித்த முக்கிய தகவல்..!!

சுமார் 3 ஆண்டுகளாக உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நீடித்து வருகிறது. இந்த போரால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது மட்டுமின்றி லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக  ரஷ்யா அதிபர் புதின் அறிவித்திருந்தார். ஆனால் அன்று ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார்.

ட்ரம்பின் வரியால் கல்லாக்கட்டும் இந்தியா..!! கூடுதலாக ரூ 1000 கோடி முதலீட்டை ஈர்த்தாக அமைச்சர் தகவல்..!!

இதை தொடர்ந்து, உக்ரைனின் தலைநகர் கீவ்வில் நேற்று (24-04-2025) அதிகாலை ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தியதால்  9 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 63 பேர் படுகாயமடைந்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இந்த நிகழ்வு குறித்து X தளத்தில் பதிவிட்ட டிரம்ப் “கீவ் நகர் மீதான தாக்குதல் வருத்தமளிக்கிறது. உக்ரைனுக்கு இது மிகவும் மோசமான நேரம். வெகு விரைவில் புதினுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!