
ட்ரம்பின் வரியால் கல்லாக்கட்டும் இந்தியா..!! கூடுதலாக ரூ 1000 கோடி முதலீட்டை ஈர்த்தாக அமைச்சர் தகவல்..!!
சமீப காலமாக தமிழக அரசு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின், ஜப்பான், துபாய், லண்டன் போன்ற பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் சென்னை ஶ்ரீபெரும்புத்தூரில் பிரபல நிறுவனமான சாம்சங் ஏற்கனவே பல கோடி முதலீட்டில் தொழிற்சாலையை இயக்கி வருகிறது. இந்நிலையில் “செல்போன், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியை வியட்நாமில் இருந்து இந்தியாவிற்கு மாற்ற சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் வியட்நாமில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா 46% வரி விதிக்கும் நிலையில், இந்தியாவுக்கு 10% வரி மட்டுமே வசூலிக்கப்படுவதால் இங்கு உற்பத்தி ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், அதற்காக கூடுதலாக 1000 பணியாளர்களை நேற்று (24-04-2025) பணியில் நியமித்து உள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்”.























