ரூ.3 கட்டணத்தில் ஆதார் தொடர்பான சேவை – UIDAI அறிவிப்பு!

0
ரூ.3 கட்டணத்தில் ஆதார் தொடர்பான சேவை - UIDAI அறிவிப்பு!
ரூ.3 கட்டணத்தில் ஆதார் தொடர்பான சேவை - UIDAI அறிவிப்பு!
ரூ.3 கட்டணத்தில் ஆதார் தொடர்பான சேவை – UIDAI அறிவிப்பு!

UIDAI மையம் ஆதார் தொடர்பான சேவைக்கு மிகவும் குறைந்த அளவில் ரூ.3 என்ற சேவைக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. குறைவான சேவைக் கட்டணத்தின் மூலம் அனைவரும் எளிதாக பயனடையும் வகையில் மாற்றம் செய்யப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

ஆதார் சேவை:

இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை அவசிய சான்றாகும். அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான எண்ணுடன் வழங்கப்பட்டிருக்கும். மேலும், சமீபத்தில், ஒருவர் மெய்நிகர் ஐடி எண்ணை அசல் 12 இலக்க ஆதார் எண்ணுக்கு பதிலாக பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. இந்த முறை ‘மாஸ்க் ஆதார்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முறை அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் பல தனிப்பட்ட அடையாள ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அக்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறப்பு – மாநில அரசு முடிவு!

இந்நிலையில், NPCI-IAMAI ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய ஃபின்டெக் விழாவில் UIDAI, Fintech துறையில் ஆதார் மேம்படுத்துவதற்கு அபரிமிதமான சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வெரிஃபிகேஷன் செலவை ரூ. 20 லிருந்து ரூ .3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 99 கோடி இ-கேஒய்சிக்கு ஆதார் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த முயற்சியின் நோக்கம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அதிக சேவைகளை எளிதாக பெறுவதாகும். பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபடுபவர்கள் உங்கள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் – சிலிப் இல்லாதவர்களும் ஓட்டு போட அனுமதி!

முதலீட்டாளர் சந்தை கட்டுப்பாட்டாளர் செபி முதலீட்டாளர்கள் தங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் செப்டம்பர் 30 -ம் தேதிக்குள் இணைத்து பத்திரச் சந்தையில் வர்த்தகம் தொடர அறிவுறுத்தப்பட்டது. இல்லையென்றால், சம்பந்தப்பட்ட நபரின் நிரந்தர கணக்கு (PAN) செயல்பாட்டில் இருக்காது. அதவாது, சம்பந்தப்பட்ட நபரின் KYC விவரங்கள் முழுமையடையாமல் இருக்கும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), பிப்ரவரி 2020 ல் ஜூலை 1, 2017 நிலவரப்படி ஒதுக்கீடு செய்தவரின் PAN செப்டம்பர் 30, 2021 அல்லது CBDT ஆல் நிர்ணயிக்கப்பட்ட வேறு எந்த தேதியுடன் ஆதார் உடன் இணைக்கப்படவில்லை என்றால், (நிரந்தர கணக்கு எண்) செயலிழக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!