கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான UGC-NET EXAM 2021 தேர்வுகள் – மார்ச் 9 ஆம் தேதி வரை கடைசி நாள் நீட்டிப்பு!!

0
கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான UGC-NET EXAM 2021 தேர்வுகள் - மார்ச் 9 ஆம் தேதி வரை கடைசி நாள் நீட்டிப்பு!!
கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான UGC-NET EXAM 2021 தேர்வுகள் - மார்ச் 9 ஆம் தேதி வரை கடைசி நாள் நீட்டிப்பு!!
கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான UGC-NET EXAM 2021 தேர்வுகள் – மார்ச் 9 ஆம் தேதி வரை கடைசி நாள் நீட்டிப்பு!!

இந்திய அரசின் மனிதவள துறையின் கீழ் செயல்படும் தேசிய தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் UGC-NET EXAM 2021 தேர்வுகள் எழுத மார்ச் 2 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 9 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

UGC-NET EXAM 2021 தேர்வு:

தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் UGC-NET EXAM 2021 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்காக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் எழுத விருப்பமுள்ளவர்கள் கல்வித்தகுதியாக கலை, அறிவியல், மேலாண்மையியல், பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறைகளில் 55% மதிப்பெண்ணுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் இந்த தேர்வுகள் எழுத 31 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பில் SC,ST ,OBC, PWD பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை சலுகைகள் வழங்கப்படும். இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும். NET தேர்வுகள் இரண்டு தாள்களை கொண்ட தேர்வாக நடத்தப்படும். முதல்தாளில் 50 கேள்விகள் 100 மதிப்பெண்ணும், இரண்டாவது தளத்தில் 100 கேள்விகள் 200 மதிப்பெண்ணும் இருக்கும்.

தமிழக காவல் துறையினருக்கு விடுமுறை ரத்து – டி.ஜி.பி., அறிக்கை!!

இந்த தேர்வுகள் 1 மணி நேரம் நடத்தப்படுகின்றன. இரண்டாம் தாள் தேர்வுகள் 2 மணி நேரம் நடத்தப்படும். இந்த தேர்வுகளுக்கான கடைசி தேதி மார்ச் 2 என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான கடைசி தேதி மார்ச் 9 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளவர்கள் விண்ணப்பிக்க www.ntanet.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!