செப்.16 அன்று UGC NET 2022 ஹால்டிக்கெட் வெளியீடு – முக்கிய விவரங்கள் இதோ!

0
செப்.16 அன்று UGC NET 2022 ஹால்டிக்கெட் வெளியீடு - முக்கிய விவரங்கள் இதோ!
செப்.16 அன்று UGC NET 2022 ஹால்டிக்கெட் வெளியீடு - முக்கிய விவரங்கள் இதோ!
செப்.16 அன்று UGC NET 2022 ஹால்டிக்கெட் வெளியீடு – முக்கிய விவரங்கள் இதோ!

செப்டம்பர் 16, 2022 அன்று UGC NET 2022 தேர்வுகளின் 2 ஆம் கட்ட தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் அவற்றை அதிகாரப்பூர்வ வலைத்தளமான ugcnet.nta.nic.in இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

UGC NET தேர்வு:

பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வு என்பது பல்வேறு இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ‘உதவி பேராசிரியர்’ மற்றும் ‘ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர்’ பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும். யுஜிசி நெட் 2022 தேர்வு தொடர்பான புதிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை NTA வெளியிட்டுள்ளது. இதன்படி, யுஜிசி நெட் அட்மிட் கார்டு செப்டம்பர் 16, 2022 அன்று வெளியிடப்படும்.

அட்மிட் கார்டுக்கு முன், தேர்வு நகரச் சீட்டுகள் என்டிஏவால் வழங்கப்படும். இவற்றை தேர்வர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான – ugcnet.nta.nic.in ல் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். செப்டம்பர் 11,ம் தேதியான நேற்று வெளியான அறிவிப்பின் படி, UGC NET 2022 தேர்வுக்கான தேர்வு நகரச் சீட்டுகள் நாளை, செப்டம்பர் 13, 2022 அன்று வெளியிடப்படும். முன்னதாக, தேர்வு நகரச் சீட்டுகள் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக அதை NTA நாளை ஒத்திவைத்துள்ளது.

இளைஞர்களுக்கு சூப்பர் ஜாக்பாட் ..! புதிதாக 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – துணை முதல் மந்திரி தகவல் !

Exams Daily Mobile App Download

இந்த மாற்றத்தின் காரணமாக UGC NET 2022 தேர்வுக்கான விரிவான அட்டவணை மற்றும் முக்கியமான தேதிகளை அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு நகர சீட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிடப்படும் என்றும், அட்மிட் கார்டு செப்டம்பர் 16ம் தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வுகள் செப்டம்பர் 20 முதல் 30 வரை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் பற்றிய விவரங்கள் சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு ஆன்லைனில் தெரிவிக்கப்படும் என்று NTA வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!