
இளைஞர்களுக்கு சூப்பர் ஜாக்பாட் ..! புதிதாக 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – துணை முதல் மந்திரி தகவல் !
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சுதந்திர தினத்தன்று அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்க உள்ளதாக தெரிவித்தார். இது குறித்து தற்போது கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
புதிதாக 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு:
பீகாரில் எட்டாவது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார். இந்தியாவில் கொரோனா காரணமாக பல்வேறு தரப்பினரும் வேலைவாய்ப்பை இழந்துள்ள நிலையில், பல்வேறு அரசுகளும் அதில் இருந்து மக்களை மீட்கும் விதமாக, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அதே போல், பீகார் இளைஞர்களுக்கு சுதந்திர தினத்தன்று ஒரு பெரிய அறிவிப்பை அம்மாநில முதல்வர் அறிவித்தார். அந்த அறிவிப்பின் படி, அரசு மற்றும் தனியார் என பல்வேறு துறைகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், இந்த திட்டம் வெற்றி பெற்றால், இந்த எண்ணிக்கை 20 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்று (செப். 12) முதல் 5 ரயில்கள் ரத்து – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இதனை நம்ப மறுப்பவர்கள் பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயம் அது நடக்கும். யாரோ ஒரு சிலர் ஏதோ கூறியதற்கு நான் பதிலளிக்க முடியாது. நாங்கள் அரசில் இருக்கிறோம். இது எங்களுடைய உறுதிமொழி. நிச்சயம் இது நடக்கும்” என கூறினார். இந்த அறிவிப்பால் பீகார் இளைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்