தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே அரசு அலுவலகங்களில் அனுமதி – UAE அறிக்கை!
உலகளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பல நாடுகள் அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
உலகளவில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க அந்த நாடுகள் பல கட்டுப்பாடு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி அரசு அலுவலகங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் விண்டோஸில் புதிய சிக்கல் – செக்யூரிட்டி அப்டேட் விளக்கம்!
பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில நாடுகள் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே அடுத்தடுத்து வரும் கொரோனா அலையை தடுக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) வெளியிட்ட அறிவிப்பின் படி, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் செல்ல கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அந்த நாட்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சர் உள்பட அனைத்து ஊழியர்கள், அலுவலகத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், இதில் 16 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.