விஜய்யின் அடுத்த அதிரடி.. தயாராகும் ஊழல் பட்டியல்.. விவரம் உள்ளே!!
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்களை எடுத்துரைத்தார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உருவாகி வரும் நிலையில் தற்போது த.வெ.க கட்சி தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு.. முழு விவரம் உள்ளே!!
அதாவது தமிழகம் முழுவதும் ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் ஊழல்கள் பற்றி முழு தகவல் திரட்டி ஆதாரங்களுடன் தனக்கு அனுப்புமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டினால், வழக்குகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஊழல் பட்டியல் தயாரித்து ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.



























