சுனாமி எச்சரிக்கை…பீதியில் மக்கள் .!! ” காரணம் மற்றும் முழு விவரம் உள்ளே”..??
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளில் உள்ள பல்வேறு பகுதிகளில் இயற்கை சீற்றங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மேலும், சமீபத்தில், போலந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் தொடர் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த வகையில், தற்போது சில முக்கிய தீவு நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, பசிபிக் கடலில் உள்ள வனுவாட்டு தீவு நாட்டின் 54 கி.மீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று(டிசம்பர் 17) ஏற்பட்டுள்ளது. மேலும், இது ரிக்டர் அளவுகோலில் 7.4% ஆக பதிவாகியுள்ளதால் வனுவாட்டு தீவு மற்றும் அதன் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்து நாட்டுக்கு ‘சுனாமி’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


























