இனி அமெரிக்காவிற்குள் நுழைய இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடை.. டிரம்ப் விதித்த அதிரடி உத்தரவு..
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகிறது. மேலும், அமெரிக்காவின் சட்டப்பூர்வ அந்தஸ்து பெற்றிடாத நபர்கள் கூட்டாட்சி அரசாங்கத்தின் மூலம் தங்களது அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும் அல்லது சிறை தண்டனைகள் போன்ற கடுமையான விதிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் வகையில் மேலும் புதிய மசாதோ ஒன்றை டிரம்ப் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க்கு இந்திய அரசு விதித்த நிபந்தனை…!! அதிர்ந்த மஸ்க்..!! நடந்தது என்ன..?
அதாவது, அமெரிக்கா அதிபர் டோனல்ட் டிரம்ப் 41 நாடுகளின் குடிமக்கள்மீது பயணத் தடை விதிக்கத் திட்டமிடுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் படி முழுமையாக விசா நிறுத்தம் செய்யப்பட்ட பட்டியலில் ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வடகொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனின்சுலா, ஏமன் ஆகிய நாடுகள் உள்ள நிலையில் பாகிஸ்தான், பூடான், மியன்மார் உள்ளிட்ட 31 நாடுகளுக்கு சில விசா கட்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளன. இதனால் அந்நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குச் சுற்றுலா, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற வசதிகளை பெற விசாக்களைப் வழங்கப்படாது என கூறப்படுகிறது.


























