
“அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்”.. ட்ரம்ப் அரசு வெளியிட்டுள்ள அதிரடி தகவல்..
அமெரிக்க அரசு, அங்கீகாரமின்றி நாட்டிற்குள் நுழைந்த ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை தடுக்கும் விதமாக ஜனவரி 23, 2025 அன்று டொனால்ட் டிரம்ப் “கிராண்ட் ஓல்ட் பார்ட்டி” (GOP) தலைமையில் சிறப்பு மசோதா ஒன்றை நிறைவேற்றினார். இந்த மசோதாவின் கூற்றுப்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பும் பணியானது அமெரிக்கா ராணுவ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் புலம்பெயர்ந்துள்ள இந்தியர்கள் மீது புதிய புகார் ஒன்றை டிரம்ப் அரசு தொடுத்துள்ளது.
TNPSC Group 4 2025 New Syllabus, Notification, Exam Date in Tamil – Free PDF Download..!!
அதாவது, “டிரம்ப் அரசானது அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைத்தது”. மேலும், “அமெரிக்காவில் வசிக்கும் 55 லட்சம் இந்தியர்களில் 8-12 லட்சம் பேர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்” என்று தற்போது தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் ஏராளமான இந்தியர்கள் போலீசுக்கு பயந்து வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, “இந்தியாவில் இருக்கும் வங்கதேசத்தவரை திருப்பி அனுப்ப மோடி அரசு காட்டும் அதே தீவிரத்தை, இந்திய பிரஜைகளை திருப்பி அனுப்புவதில் டிரம்ப் அரசு காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்”

























