அமெரிக்காவில் சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தவர்களுக்கு புதிய ஆப்…!! டிரம்பின் அதிரடி நடவடிக்கை…!!
அமெரிக்க அதிபரான டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறினார். மேலும், ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் டிரம்ப் நிர்வாக ஒழுங்கு முறையில், அமெரிக்காவின் சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லாதவர்கள் கூட்டாட்சி அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் அல்லது அபராதம் / சிறை தண்டனைகள் போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அழுத்தம் கொடுக்கக்கூடிய பிற நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் கையில் எடுத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நாடு கடத்தல் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது மற்றும் தடுப்பு காவல் எதிர்கொள்ளாமல் சுயமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கும் ஒரு புதிய செயலியை டிரம்ப் நிர்வாகம் நேற்று (10-03-2025) வெளியிட்டது.
மேலும், CBP Home எனப்படும் இந்த எல்லைப் பாதுகாப்பு செயலி, தாமதாக பதிவு செய்து கொண்டு நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை, மீண்டும் சட்டப்படி அமெரிக்காவிற்கு திரும்பி வருவதற்கான அனுமதி அளிக்கிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.



























