வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பொது சேவை மையங்களாக மாற்றம் – பீகார் அரசு அறிவிப்பு!
பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் விரைவில் பொது சேவை மையங்களாக செயல்பட தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு
பீகார் மாநில கூட்டுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, 8400 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் விரைவில் பொது சேவை மையங்களாக செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் கிராமப்புறங்களில் வங்கி வசதிகள், ஆதார் அப்டேட், ரயில் டிக்கெட் புக்கிங் மற்றும் விமான டிக்கெட் போன்ற 300 -க்கு மேற்பட்ட சேவைகள் வழங்கப்படவிருகிறது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
மேலும் அந்த மாநிலத்தில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த புதிய பெட்ரோல்/ டீசல் டீலர்ஷிப்கள் மற்றும் எல்பிஜி விநியோகஸ்தர்களை ஒதுக்கீடு செய்வதிலும் இந்த மையங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு – DA 4% உயர்வு… அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
இது PACS என்பது அடிமட்ட அளவிலான கூட்டுறவு கடன் நிறுவனங்களாகும். இதன் மூலம் விவசாய விவசாயிகளுக்கு குறுகிய கால மற்றும் நடுத்தர கால அளவில் கடன் வழங்குகின்றது. இதனை வலுப்படுத்த கூட்டுறவு சங்கங்களை பொது சேவை மையங்களாக உருவாக்க முடிவு செய்துள்ளது.