
இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி..! TRAI வெளியிட்ட புதிய விதிமுறைகள்..!
இந்தியாவில், பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒன்றை வழக்கமான அழைப்புகள் மற்றும் டேட்டாவிற்கும் மற்றொன்றை அவசரநிலை பயன்பாட்டிற்காகவும் வைத்திருக்கிறார்கள். மேலும், 2024 ஜூலை மாதம் ஏற்பட்ட ரீசார்ஜ் திட்டங்களில் விலை உயர்வை தொடர்ந்து, இரண்டாம் நிலை சிம்மைப் பராமரிப்பது பலருக்கு கடினமாக அமைந்தது. இந்நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சிம்களை செயலில் வைத்திருப்பதற்கான செயல்முறையை எளிதாக்கும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, ஏர்டெல், ஜியோ மற்றும் வி.ஐ சிம்கார்டுகளில் “ரூ.20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள்” வரை ரீசார்ஜ் செய்யாமல் நம்பரை தக்க வைக்கலாம் என TRAI அறிவித்துள்ளது. மேலும், ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள் வரை நம்பரை தக்க வைக்கும் வசதி ஏற்கனவே உள்ள நிலையில், ரூ.20 பிடித்தம் மூலம் மேலும் 30 நாட்களுக்கு வேலிடிட்டி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலிடிட்டி நீட்டிப்பானது BSNL சிம்களில் 180 நாட்கள் வரை நீடிக்கும் என TRAI தெரிவித்துள்ளது.


























