‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘பாரதி கண்ணம்மா’ வரை – டாப் ரேட்டிங் சீரியல்களின் கமெண்ட்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் 'பாரதி கண்ணம்மா' வரை - டாப் ரேட்டிங் சீரியல்களின் கமெண்ட்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் 'பாரதி கண்ணம்மா' வரை - டாப் ரேட்டிங் சீரியல்களின் கமெண்ட்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘பாரதி கண்ணம்மா’ வரை – டாப் ரேட்டிங் சீரியல்களின் கமெண்ட்கள்!

டாப் ரேட்டிங் சீரியல்களின் டிஆர்பி எகிறுவது போல் அதற்கான ரசிகர்களின் கமெண்டுகளும் எகிற தொடங்கி இருக்கிறது. இந்த வாரம் ஹிட் சீரியல்களின் ப்ரோமோ மற்றும் அதற்கான கமெண்டுகளையும் இந்த பதிவில் காண்போம்.

ப்ரோமோ:

எப்போதும் டிஆர்பியில் முதல் இடங்களை பிடிப்பது விஜய் டிவி சீரியல்கள் தான். மற்ற சேனல்கள் என்ன தான் புது புது முயற்சிகளை எடுத்து வந்தாலும், விஜய் டிவி சீரியலை மிஞ்ச முடியவில்லை. சீரியல்களின் ஹிட்க்கு முக்கிய காரணமாக இருப்பது முன்னதாக வெளியிடப்படும் ப்ரோமா தான். அந்த ப்ரோமோவிலேயே அன்றைய தினம் தொடர் எப்படி இருக்க போகிறது என்பதை பரபரப்பாக காட்டி விடுகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் ப்ரோமோக்கள் பகிரப்பட்டு வருவதால் ரசிகர்கள் ப்ரோமோவை பார்த்து தங்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் டாப் சீரியல்களின் டாப் கமெண்டுகளை காண்போம்.

லாஸ்லியா, ஹர்பஜன் சிங் நடிப்பில் ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

கண்ணன், ஐஸ்வர்யாவின் நகையை விற்பதற்காக அடகு கடைக்காரரிடம் வருவது போலவும், கடைக்காரர் அதற்கு மூர்த்திக்கு போன் செய்து கேட்பது போல் ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எவ்ளோ கோவமாக இருந்தாலும் தம்பிக்கு ஒரு பிரச்சனை வந்தவுடன் சரியான நேரத்தில் உதவுகிறார் என்று கூறியுள்ளனர். ஊருக்குள்ள சண்டை மனசுக்குள்ள சமாதானம் என்ன சார் உங்க நாடகம் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணனுக்கு வாழ்கைய புரிய வைக்கறேன்னு சொல்லிட்டு மாறி மாறி ஹெல்ப் பண்றீங்களே என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

அஞ்சலி வளைகாப்பிற்கு வரும் கண்ணம்மா ஹேமாவை பார்த்து ஒரு வேலை இது தான் தனது இன்னொரு குழந்தையாக இருக்குமோ என்று சந்தேகப்படுவது போல் ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நீ எல்லாத்தையும் மனசுக்குள்ளயே கேட்டுக்கோ என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருவர் சரியாதா கெஸ் பன்ற ஆன அத வெளியில சொல்ல மாட்டேங்கிறியே என்று கூறியுள்ளார். ஒரு ரசிகர் இப்போதான் பரபரப்பா போய்க்கிட்டு இருக்கு இதையே கன்டினியூ பண்ணுங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதி கண்ணம்மா இப்போது தான் விறுவிறுப்பாக செல்வதாக கூறியுள்ளனர்.

பாக்கியலட்சுமி:

ராதிகாவிற்கு வேறு ஒரு புடவை கொடுத்து சமாளிக்கும் வகையில் ப்ரோமோ உள்ளது. பாக்கியலட்சுமி தொடரின் ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி எல்லாமே சரியா கவனிக்கிறார்ப்பா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வீட்டுக்கு தெரியாமல் தப்பு பண்ற எல்லாருக்கும் இதுதான் நிலைமை என்று கூறியுள்ளார். மற்றொருவர் சீக்கிரம் கோபி வீட்ல மாட்ட விடுங்க டைரக்டர் சார் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபி எல்லாரையும் நல்லா சமாளிக்கிறார்பா என்று கூறியுள்ளனர்.

ரோஜா:

ரோஜா புரோமோ பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜா சத்தியம் பண்ணுவா..உடனே உண்மையான செண்பகம் இங்க செண்பகமாக நடிக்க வருவாங்க..இதை வைத்து இன்னும் 6 மாதம் ஓட்டுவாங்க என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ரோஜாவ கொஞ்சம் நாளாக தைரியமான பெண்ணாக காட்டுகிறீர்கள் என கூறியுள்ளார். சாப்பாட்டு தட்டை தட்டி விட்ட பிரியா கையை முறிக்கி முதுகில் ‌நாலு அடி போட்ட ‌ ரோஜாவுக்கு பாராட்டு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை சீக்கிரம் முடிங்க என்பதை வலியுறுத்தும் வகையிலே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!