Top 10 Longest National Highways in India 2025 Tamil – Free PDF Download 

0
Top 10 Longest National Highways in India 2025 Tamil - Free PDF Download 
Top 10 Longest National Highways in India 2025 Tamil - Free PDF Download 

Top 10 Longest National Highways in India 2025 Tamil – Free PDF Download 

What is a  National Highway?

“நெடுஞ்சாலை” என்பது ஒரு பெரிய நகரத்தை மற்ற நகரங்களுடன் இணைக்கும் வகையில் பொதுமக்களின் போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்ட தரைவழி மார்கமாகும். இவை அந்தந்த மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது. மேலும், இந்த நெடுஞ்சாலைகள் மற்ற போக்குவரத்து வழிகளை விட பல்வேறு நன்மைகளைக் கொண்டிருப்பதால், இவை மிகப் பாதுகாப்பான போக்குவரத்து முறையாகக் கருதப்படுகின்றன. 

 National Highways in India 

கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை மிக்க நாடான இந்தியா, அதன் நிலப்பரப்புகளைக் கடந்து செல்ல  விரிவான சாலைகளின் வலையமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த சாலைகள், வர்த்தகம், பயணம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை எளிதாக்குகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலைகள் இந்தியாவின் நிதிநிலை, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. 

இதை தொடர்ந்து, உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஒருங்கிணைந்த சாலை வலையமைப்பைக் கொண்டதாக இந்தியா திகழ்கிறது. மேலும், சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாடு முழுவதும் 599 தேசிய நெடுஞ்சாலைகளைக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பைக் கொண்டுள்ளது என்றும், தேசியளவில் முக்கியமான மையமாக செயல்பட்டு, சுமார் 144,000 கிலோமீட்டர் நீளமுள்ள தூரத்தை விரிவான சாலைகள் மூலம் உள்ளடக்கி வருகிறது.

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 44 ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் தொடங்கி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இது இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை பாதையாக விளங்கி வருகிறது. மேலும், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற முக்கிய மாநிலங்களை இணைக்கும் இந்த நெடுஞ்சாலை வர்த்தகம் மற்றும் பயணத்திற்கு இன்றியமையாத பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, இந்தியாவில் உள்ள டாப் 10 நெடுஞ்சாலைகள் பற்றி கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். 

Top 10 Longest National Highways In India

தேசிய நெடுஞ்சாலையின் பெயர்கள்  தூரம் (கி.மீ.)  பாதை
NH 44  3,745  ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை
NH 27  3,507  குஜராத்தில் உள்ள போர்பந்தர் முதல் அசாமில் உள்ள சில்சார் வரை
NH 48  2,807  டெல்லியில் இருந்து சென்னை வரை
NH 52  2,317 சங்ரூர், பஞ்சாப் முதல் அங்கோலா, கர்நாடகா
NH 30  2,040  உத்தரகண்டில் உள்ள சித்தர்கஞ்ச் முதல் ஆந்திரப் பிரதேசத்தில் இப்ராஹிம்பட்டினம் வரை
NH 6  1,873  ஜோராபத் மேகாலயாவில் இருந்து மிசோரம் வரை
NH 53  1,781  குஜராத்தில் ஹஜிரா முதல் ஒடிசாவில் உள்ள பிரதீப் துறைமுகம் வரை.
NH 16  1,711 மேற்கு வங்காளத்தின் கிழக்கு கடற்கரை முதல் தமிழ்நாட்டின் சென்னை வரை.
NH 66 1,622  1,622 பன்வேல் மற்றும் கன்னியாகுமரியில் முடிகிறது.
NH 19  1,435  டெல்லி முதல் கொல்கத்தா வரை

 

Download PDF 

How many national highways are there in India?

India has 599 national highways, which cover a total distance of over 1,44,000 kilometers.

Which is the No. 1 highway in India?

The National Highway 1 (NH 1) in India, which links New Delhi to Attari near the India-Pakistan border, was the No. 1 highway in India. 

Which is the longest National Highway in India?

The longest national highway in India is NH44, which covers Srinagar to Kanyakumari with a distance of 3,745 kilometers.

Who maintains the national highways in India?

The Ministry of Road, Transport, and Highways is responsible for managing these highways.

Which is the shortest National Highway in India?

The shortest National Highway in India is NH 548, located in Maharashtra, with a length of only 5 kilometers.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!