பொதுமக்கள் கவனத்திற்கு… தஞ்சாவூர், திருவள்ளூரில் நாளைய மின்தடை பகுதிகள்… லிஸ்ட் இதோ..
நகரின் மின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் செயல்முறை, மாதத்தில் ஒரு நாள் மின் பராமரிப்பு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், துணை மின் நிலையங்களில் இந்த பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறுகிய நேரத்திற்கு மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை (29-11-2024) தஞ்சாவூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தின் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
வெள்ளூர்:
வெள்ளூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்
கும்மிடிப்பூண்டி:
GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், S.P.பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, NR கண்டிகை, GR கண்டிகை.
கொளத்தூர்:
பாலாஜி நகர், சக்திவேல் நகர், தணிகாசலம் நகர், திருப்பதி நகர், யுனைடெட் காலனி, ஆர்.எச்.ரோடு, ஸ்ரீநகர் காலனி, திருமலை நகர், அஞ்சுகம் நகர், விவேக் நகர், கே.எஸ்.நகர், செல்லியம்மன் நகர், அம்பேத்கர் நாகை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.


























