முதுகலை ஆசிரியர் பணியிட கலந்தாய்வு நாளை தொடக்கம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

0
முதுகலை ஆசிரியர் பணியிட கலந்தாய்வு நாளை தொடக்கம் - முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
முதுகலை ஆசிரியர் பணியிட கலந்தாய்வு நாளை தொடக்கம் - முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
முதுகலை ஆசிரியர் பணியிட கலந்தாய்வு நாளை தொடக்கம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

மதுரையில் வருகிற புதன்கிழமை (டிசம்பர் 30) அன்று வேதியியல் பாட முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான பணியிட ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பணியிட கலந்தாய்வு:

கடந்த ஆண்டு காலியாக இருந்த 2144 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வினை ஆசிரியர் தேர்வு ஆணையம் சார்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இதில் வேதியியல் பாடத்தை தவிர மற்ற பாட ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பணிநியமன ஆணை அனுப்பப்பட்டது. இதன்படி வேதியியல் பாடங்களில் காலியாக உள்ள 329 பணியிடங்களில் 319 தேர்வர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிட்டது.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு – புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர் வழக்கு தள்ளுபடி!!

இதன்படி தற்போது மதுரையில் வேதியியல் பாட முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான பணியிட ஒதுக்கீடு கலந்தாய்வு வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். இது குறித்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடந்த வருடம் 2018-19-ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள வேதியியல் பாட முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டது.

ஜேஇஇ தேர்வின் புதிய மாற்றங்கள் – தேசிய தேர்வு முகமை விளக்கம்!!

தற்போது தேர்வு செய்யப்பட்ட அரிசிரியர்களின் பட்டியலை தமிழ்நாடு கல்வி இயக்குனர் வெளியிட்டார். இதனடிப்படையில் மதுரையில் உள்ள முகவரியில் விண்ணப்பித்துள்ள பணியாளர்களின் பணியிட ஒத்துக்கிட்டு கலந்தாய்வு, தல்லாகுளம் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் EMIS இணையதளம் மூலம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு பங்கேற்பவர்கள் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் புகைப்பட நகலுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!