தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு – புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர் வழக்கு தள்ளுபடி!!

0
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு - புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர் வழக்கு தள்ளுபடி!!
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு – புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர் வழக்கு தள்ளுபடி!!

தமிழக அரசு அறிவித்த 7.5% இட ஒதுக்கீட்டில் தனக்கும் இடம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு பள்ளியில் படித்த தமிழகத்தை சேர்ந்த மாணவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழக அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கு 7.5% உள் ஒதுக்கீடு தமிழக அரசால் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பல மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த மாணவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.

ஜேஇஇ தேர்வின் புதிய மாற்றங்கள் – தேசிய தேர்வு முகமை விளக்கம்!!

விழுப்புரம் மாவட்டம், குமுளம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் தொடுத்த வழக்கின் மனுவில், தனது கிராமம் புதுச்சேரியை ஒட்டிய பகுதியில் உள்ளது. இதனால் தான் புதுச்சேரி மாநில அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆயினும், தான் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் புதுச்சேரியின் இட ஒதுக்கீட்டில் தன்னை நிராகரித்து விட்டனர்.

அதனால் தமிழக அரசின் 7.5% மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்தேன். ஆனால் கலந்தாய்வில் தனது பெயர் 7.5% இட ஒதுக்கீடு பெறும் மாணவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே, 7.5% இட ஒதுக்கீட்டில் தனக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கான இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

நீதிமன்றத்தின் பதில்:

மணிகண்டன் தொடுத்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு பதில் மனுவில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே 7.5 % உள் இட ஒதுக்கீட்டில் இடம் வழங்க முடியும். மனுதாரர், புதுச்சேரி அரசின் பள்ளியில் படித்துள்ளதால் அவருக்கு இந்த சலுகை கிடைக்காது என்று தெரிவித்தார்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிச.31 கடைசி தேதி – தவறினால் ஜனவரி முதல் அபராதம்??

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “தமிழகத்தில் படித்த மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு வழங்க முடியும். புதுச்சேரியில் படித்த மாணவர்களுக்கு இந்த சலுகையை நீடித்து வழங்க இந்த நீதிமன்றத்தில் உத்தரவிட முடியாது” என்று பதில் அளித்து மாணவரின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!