ஜேஇஇ தேர்வின் புதிய மாற்றங்கள் – தேசிய தேர்வு முகமை விளக்கம்!!

0
ஜேஇஇ தேர்வின் புதிய மாற்றங்கள் - தேசிய தேர்வு முகமை விளக்கம்!!
ஜேஇஇ தேர்வின் புதிய மாற்றங்கள் - தேசிய தேர்வு முகமை விளக்கம்!!
ஜேஇஇ தேர்வின் புதிய மாற்றங்கள் – தேசிய தேர்வு முகமை விளக்கம்!!

ஜேஇஇ தேர்வு முறையில் செய்யப்பட்ட மாற்றங்களினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தேசிய தேர்வு முகமை சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது

தேசிய தேர்வு முகமை:

நாடு முழுவதிலும் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் பிரதானத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

பிரதமர் மோடியின் ‘மனதில் குரல்’ நிகழ்ச்சி – விழுப்புரம் பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு!!

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் முதல் நிலைத் தேர்வில் பல மாற்றங்களை கொண்டு வந்தது. தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் இத்தேர்வானது ஆண்டிற்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என 4 முறை எழுதிக் கொள்ளலாம் என்றும், அதில் மாணவர்கள் எடுத்திருக்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் போன்ற மாற்றங்கள் புதிதாக கொண்டு வரப்பட்டன.

யோகா & இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி – முக்கிய அறிவிப்பு!!

மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் பொதுவான கேள்விகளுக்கு தேசிய தேர்வு முகமை தனது இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ளது.

இணையதள முகவரி:

ஜேஇஇ தேர்வு தொடர்பான மாணவர்களின் பொதுவான 36 கேள்விகளுக்கு தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு  (jeemain.nta.nic.in), (www.nta.ac.in) என்ற முகவரியில் விளக்கங்களை பெறலாம். இதை தவிர ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை என்டிஏ-க்கு தெரியப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாங்கள் தேர்வெழுத உதவியாளர் கோருவதற்கு (www.nta.ac.in) என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!