நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. விவரம் இதோ!!
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நாளை (நவம்பர் 11) முதல் அடுத்த சில தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (நவம்பர் 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

























