வெகுவாக சரிந்த தக்காளியின் விலை – இன்றைக்கு கிலோ எவ்வளவு? தெரியுமா.. விவரம் இதோ!

0
வெகுவாக சரிந்த தக்காளியின் விலை - இன்றைக்கு கிலோ எவ்வளவு? தெரியுமா.. விவரம் இதோ!
வெகுவாக சரிந்த தக்காளியின் விலை - இன்றைக்கு கிலோ எவ்வளவு? தெரியுமா.. விவரம் இதோ!
வெகுவாக சரிந்த தக்காளியின் விலை – இன்றைக்கு கிலோ எவ்வளவு? தெரியுமா.. விவரம் இதோ!

தக்காளியின் வரத்து அதிகரிப்பால் அதன் விலை வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது பிரபல கோலார் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ 10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி விலை:

இந்தியாவில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் வரத்து குறைந்ததாலும் தொடர்ந்து கனமழை பெய்த காரணத்தினாலும் தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ. 250 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெரும்பாலும் தக்காளி வாங்குவதையே தவிர்த்து வந்தனர். இந்நிலை எப்போது முடிவுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் விவசாயிகள் தக்காளி சாகுபடியை அதிகரிக்க தொடங்கினர்.

முகூர்த்த நாளை முன்னிட்டு தங்கத்தின் விலை திடீர் சரிவு – நகைப்பிரியர்கள் ஹாப்பி!

இந்த காரணத்தினால் தற்போது சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் தக்காளியின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கோலார் மார்க்கெட்டில் தக்காளியின் விலை ஒரு கிலோ ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.30-க்கும் விற்பனையாகி வருகிறது. 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளியின் விலை கடந்த மாதங்களில் ரூ. 2000க்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ. 300 முதல் ரூ. 350 விற்பனை செய்யப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!