Tokyo Olympics: இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி – லவ்லினா அரையிறுதிக்கு முன்னேற்றம்!
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கான மற்றொரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன்.
ஒலிம்பிக் போட்டி
உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு போட்டியிட்டு வரும் ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் பதக்கத்தை வெல்வதற்காக இந்தியா போராடி வரும் சூழலில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அதாவது இன்று (ஜூலை 30) நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், 69 கிலோ எடைப்பிரிவில் அரை இறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு மற்றொரு பதக்கத்தை பெற்றுத் தர உள்ளார் அவர்.
இந்தியாவில் ஒரே நாளில் 44,230 பேருக்கு கொரோனா – 555 பேர் உயிரிழப்பு!
முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில், இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் அதிகளவு பதக்கங்களை பெற்று சீனா முதல் இடத்திலும், ஜப்பான் மற்றும் அமெரிக்கா முறையே 2 ஆவது மற்றும் 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவை பொருத்தளவு இதுவரை ஒரே ஒரு வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளது. இந்திய வீரர்கள் மற்ற போட்டிகளில் வெற்றி பெற திக்கி திணறி கொண்டிருக்கும் வேலையில் இந்தியாவுக்கான மற்றுமொரு பதக்கம் கிடைக்க உள்ளது.
TN Job “FB
Group” Join Now
அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, தடகளம்,, ஹாக்கி, குத்துச்சண்டை, கோல்ப், பேட்மிண்டன் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர். இதில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் கால் இறுதிக்கு தகுதி பெற்ற வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், சீனாவை சேர்ந்த 2018 உலக சாம்பியனான தைபேயின் சென் நீன்-சின் என்பவரை எதிர்கொண்டார்.
இதற்கு முன்னதாக மூன்று முறை இவருக்கு எதிராக ஆட்டம் கண்டிருந்த போதிலும் மூன்று முறையும் தைபேயின் சென் நீன்னை, லவ்லினா வீழ்த்தியுள்ளார். தற்பொழுது நடைபெற்றுள்ள போட்டியில் 4-1 என்ற கணக்கில் அவரை தோற்கடித்த லவ்லினா தனது ஒலிம்பிக் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். தவிர குத்துச்சண்டை மகளிர் 60 கிலோ பிரிவில் இந்தியாவை சேர்ந்த சிம்ரஞ்சித் கவுர், தாய்லாந்தை சேர்ந்த உலகப் பதக்க வீராங்கனை சுடபோர்ன் சீசோண்டியிடம் தோல்வியை தழுவியுள்ளார்.