
புதுச்சேரியில் மீண்டும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!! ” மகிழ்ச்சி வெள்ளத்தில் மாணவர்கள்”…!!
தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால், மக்கள் பல்வேறு வகையான இடர்பாடுகளை சந்தித்து வருகிறார்கள். மேலும், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழையின் தாக்கம் சற்று அதிகரித்ததால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த வகையில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இன்று(19.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.


























