
BREAKING NEWS: கனமழை தாண்டவம்…இன்று(13.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!உங்க மாவட்டமும் இருக்கானு பாத்துக்கோங்க”..?
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவு வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 3 தினங்களுக்கு முன் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தற்போது வலுவிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கனமழை எதிரொலியாக திருவண்ணாமலை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(13.12.2024) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மதுரை, சிவகங்கை புதுக்கோட்டை,மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம், விருதுநகர், தேனி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(டிசம்பர் 13) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

























