கொல்லிமலை அருவியில் குளிக்க தடை..!! “சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்”..காரணம் இது தானா”..!!
தமிழகத்தில் பல்வேறு புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் அமைத்துள்ளன. இங்கு பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு சுற்றுலாத் தலங்களில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மிக முக்கிய அருவிகளில் இன்று(டிசம்பர் 13) சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை எதிரொலியாக கொல்லிமலை அருவி, ஆகாய கங்கை, மாசிலா அருவி, புளியஞ்சோலை அருவி மற்றும் நம்ம அருவிகளில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


























