அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் நிலை என்ன?? ” இந்திய வானிலை மையம் எச்சரிக்கை”..!!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், தமிழகத்தில் இன்றுமுதல் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, தற்போது இது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



























