
தமிழகத்தில் பலத்த மழை பெய்யும்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை இப்படிதான்.. இன்றைய வெதர் ரிப்போர்ட்!!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (அக்டோபர் 10) முதல் அடுத்து வரும் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், விழுப்புரம், கடலூர், மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, பெரம்பலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிலிண்டர் கிடைப்பதில் இனி சிக்கல்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
இதைத்தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். அதேபோல் வரும் இன்று (அக்டோபர் 10) முதல் அக்டோபர் 14 வரை தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
























