
Today Vegetable Price : மதுரை மக்களே..!! பொங்கலை முன்னிட்டு அதிகரிக்கும் காய்கறி விலை..!! எவ்வளவுனு தெரியுமா..?
தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. மேலும், இந்தநாட்களில் பெரும்பான்மையானோர் தங்களது வீடுகளில் காய்கறி உணவுகளை (Vegeterian ) சமைப்பதால் ஒவ்வொரு வருடமும் இந்தநாட்களில் காய்கறிகளின் விலையானது அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில், பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தற்போது இருந்தே காய்கறிகளின் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மதுரை காய்கறி சந்தையில், 1 கிலோ தக்காளி 18 ரூபாய், 1 கிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாய், 1 கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய், உருளைக்கிழங்கு 40 ரூபாய், காலிபிளவர் 15 ரூபாய் , கேரட் 60 ரூபாய், முருங்கைக்காய் 140 ரூபாய், கத்தரிக்காய் 60 ரூபாய், பீன்ஸ் 60 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


























