விதிகளை மீறிய வங்கிகளுக்கு அபராதம் விதித்த RBI…!! இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்களா..?
வாடிக்கையாளர்கள் விதிகளை மீறினால் அதற்கான அபராதத்தை வங்கிகள் வசூலிப்பது வழக்கமான விதிமுறையாகும். அந்த வகையில் விதிகளை மீறியுள்ள 4 வங்கிகளுக்கு எதிராக தற்போது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி எதற்கு இந்த நடவடிக்கையை எடுத்தது மற்றும் எவ்வளவு அபராதம் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
அதாவது, KYC மற்றும் கடன் தொடர்பான விதிமுறைகளை பின்பற்றாத நான்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஒரு NBFC மீது நிதி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் “கர்நாடக சார்ந்த பெல்காம் மாவட்ட வருவாய் ஊழியர் கூட்டுறவு வங்கி, திண்டுக்கல் – வத்தலக்குண்டு கூட்டுறவு அர்பன் வங்கி மற்றும் சிவகாசி கூட்டுறவு அர்பன் வங்கி ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி தலா ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது”. இதை தொடர்ந்து, புனே “ஜந்தா சககாரி வங்கி” மீது சில கடன் வாங்கியவர்களின் கடன் கணக்குகளை செயல்படாத சொத்துக்களாக வகைப்படுத்த தவறவிட்டது மற்றும் சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க தவறியதால் மத்திய ரிசர்வ் வங்கி ரூ.17.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது.



























