இன்று சென்னையில் வங்கதேச அணியுடன் மோதும் நியூசிலாந்து – 3வது முறை வெற்றி பெறுமா??
இன்று சென்னையில் நடைபெறும் லீக் போட்டியில் வங்கதேச அணியுடன் நியூசிலாந்து அணி மோதவிருக்கின்றனர்.
உலகக்கோப்பை:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டி இன்று சென்னையில் நடைபெற இருக்கும் நிலையில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணியினர் மோதிக்கொள்ள இருக்கின்றனர். ஏற்கனவே, நியூசிலாந்து அணியினர் இங்கிலாந்து அணியுடன் மோதி 9 விக்கெட் வித்தியாசத்திலும், நெதர்லாந்து அணியுடன் மோதி 99 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது.
Join Our WhatsApp Group” for Latest Updates
அதே போல, வங்காளதேச அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன் பின்னர், இங்கிலாந்து அணிக்கு எதிராக 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறது. இந்நிலையில், நியூசிலாந்து அணியினர் மற்றும் வங்காளதேச அணியினர் மோத இருக்கும் நிலையில் நியூசிலாந்து அணியினர் வங்கதேச அணியினரை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்யுமா அல்லது வங்காளதேசம் இரண்டாவது வெற்றி பெற வழிவகுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் 2வது தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா அணி – 134 ரன் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி!!
சர்வதேச ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி தொடர்ந்து பல ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்திருக்கும் நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் எனவும் ரசிகர்களின் மத்தியில் கருத்து கணிப்பு நிலவி வருகிறது.