
Today Gold Rate : அடேங்கப்பா..!! தங்கம் விலையில் இவ்வளவு மாற்றமா..? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!
இந்தியாவில் தங்கத்தின் பயன்படானது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிகளவு உள்ளது. மேலும், நகை பிரியர்கள் பொங்கல் பண்டிகை போன்ற சுபமுகுர்த்த தினங்களில் நகை வாங்க நகை கடைகளை நோக்கி படை எடுப்பது வழக்கம். இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய நாளுக்கான தங்கம் விலை :
சென்னையில், இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 58,400க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல், கிராமுக்கு ரூ. 15 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 7300 க்கு விற்பனையாகி வருகிறது.


























