Today Gold Rate : தீபாவளியை முன்னிட்டு சரிந்த தங்கம் விலை..!! மகிழ்ச்சியில் மக்கள்…!!
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாகவே தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், தீபாவளி மற்றும் அடுத்தடுத்து வர போகும் சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு நகை விலை குறையுமா என எதிர்பார்த்த மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நவம்பர் மாத முதல் நாளான இன்று தங்கம் விலை சரிந்துள்ளது. அதன் முழு விவரங்களையும் கீழே காணலாம்.
அதாவது, சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு இன்று ரூ. 560 குறைந்து ரூ. 59,080 க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 7,385 க்கும் மக்களிடையே விற்பனையாகி வருகிறது.



























