Today Gold Rate: ஆத்தாடி..! வச்சு செய்யும் தங்கம் விலை..1 சவரன் ரூ,58,000-தை தாண்டியது..!!
இந்தியாவில் தங்க ஆபரணங்களின் விலையானது, கடந்த சில வாரங்களாக நினைத்து பார்க்காத அளவிற்கு உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும், இது நகை வாங்க செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக எகிறி வரும் தங்கம் விலை எப்போது குறையும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இன்றைய விலை நிலவரம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, 1 சவரன் 58,240 ரூபாயாகவும் மற்றும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, 1 கிராம் 7,280 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,07,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 107 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
























