
Today Gold Rate: சென்னையில் நகை கடைகளுக்கு இன்று விடுமுறை..!! “மற்ற மாவட்டங்களில் தங்கம் சவரனுக்கு எவ்வளவு தெரியுமா”..?
சென்னையில் “ஃ பெஞ்சல்” புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நகை கடைகளுக்கு இன்று(30.11.2024) விடுமுறை அளிக்கப்படுவதாக மெட்ராஸ் நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளனர். மேலும், மற்ற மாவட்டங்களில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்ப்போம்.
சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து, 1 சவரன் 57,200 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 7,150 ரூபாயாகவும் மக்களிடையே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,00,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


























