மேலும் ஓர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!! ” தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தகவல்”..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை “ஃபெஞ்சல்” புயலாக வலுப்பெற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த வாரத்தில் நடக்கவிருந்த அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், புயல் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இன்று(30.11.2024) நடைபெறவிருந்த தேர்வுகள், தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.



























