நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 15 & 16, 2020

0
15th & 16th March 2020 Current Affairs Tamil
15th & 16th March 2020 Current Affairs Tamil

தேசிய செய்திகள்

மன்சுக் மற்றும் மாண்ட்வா இடையே ரோரோ படகு சேவை மன்சுக் மாண்டவியாவால் தொடங்கப்பட்டது

மும்பை மற்றும் அலிபாக் அருகே மாண்ட்வா இடையே ரோல் ஆன்-ரோல் ஆஃப் பயணிகள் படகு சேவை ஞாயிற்றுக்கிழமை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா முன்னிலையில் தொடங்கப்பட்டது.

இந்த சேவையால் பயண நேரம் மற்றும் சாலையில் போக்குவரத்தை குறைக்கிறது.

சர்வதேச செய்திகள்

கொரோனா வைரஸ் காரணமாக சவுதி ஆப்பிரிக்க மற்றும் அரபு-ஆப்பிரிக்க உச்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டது

சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் 2020 முதல் காலாண்டில்  நடத்த திட்டமிடப்பட்ட சவுதி ஆபிரிக்க மற்றும் அரபு-ஆபிரிக்க உச்சிமாநாடுகளை ஒத்திவைப்பதாக அறிவித்தது. COVID-19 பரவுவதைக் கருத்தில் கொண்டு இந்த ஒத்திவைப்பு முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டது.

மாநில செய்திகள்

உத்தரகாண்ட்

உத்தரகண்டில் பூல் தேய்  விழா கொண்டாடப்பட்டது

உத்தரகண்ட் முதல்வர்  திரிவேந்திர சிங் ராவத் பாரம்பரிய அறுவடை விழாவான “பூல் தேய்” விழாவை கொண்டாடினார். மலையகத்தில் வசிக்கும் சமூகங்களுக்கிடையேயான உள் பிணைப்பை இந்த திருவிழா காட்டுகிறது.

  • உத்தரகண்ட் அறுவடை திருவிழா இது சைத்ரா மாதத்தில் (மார்ச்-ஏப்ரல்) இந்து நாட்காட்டியில் கொண்டாடப்படுகிறது.

மணிப்பூர்

விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டத்தை மணிப்பூர் முதல்வர் அறிவித்தார்

மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரென் சிங், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்களின் நலனுக்காக மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளார். முதலமைச்சரின் அகன்னாபா சனரோசிங் ஜி டெங்பாங்  மற்றும் முதலமைச்சர் கலைஞர் சிங் ஜி தெங்பாங் திட்டம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பரிசுகளை பெற்றுத்தந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நன்மைகளை வழங்கும்.

  • இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அறிவிக்கப்பட்ட பிரிவுகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு நபர்களுக்கு அரசு சேவைகளில் பொருத்தமான வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

வணிக செய்திகள்

எச்.ஐ.எல் இந்தியா லிமிடெட் வாடிக்கையாளர் கட்டண போர்ட்டலை அறிமுகப்படுத்தியது

எச்.ஐ.எல் (இந்தியா) லிமிடெட், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து, புதுதில்லியில் “வாடிக்கையாளர் கட்டண போர்ட்டலை” அறிமுகப்படுத்தியது. இதைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் எஸ்.பி.மொஹந்தி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் தெற்கு டெல்லி பிராந்தியத் தலைவர் ஸ்ரீ ஜி. கே. சுதாகர் ராவ், அரசு வணிகத் துறைத் தலைவர் ஸ்ரீ ஆர். கே. ஜக்லான் முதலியோர் தொடங்கி வைத்தனர்.

  • இந்த போரட்டலின் உதவியால் பண பரிவர்த்தனையை சுலபமாக மேற்கொள்ளலாம்

நியமனங்கள்

 டாடா பவரின் பிராண்ட் தூதராக ஷார்துல் தாக்கூர் நியமிக்கப்பட்டார்

இந்திய கிரிக்கெட் வீரர் ஷார்துல் தாக்கூர், இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான டாடா பவரின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார், இது இந்தியா முழுவதும் அமைந்துள்ள அதன் பல்வேறு ஆலைகளில் இருந்து தடையின்றி மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நீதிபதி பன்சி லால் பட் NCLAT யின் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டார்

தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) நிர்வாகத் தலைவராக நீதிபதி பன்சி லால் பட்டை அரசாங்கம் நியமித்துள்ளது.

  • அண்மையில் ஓய்வு பெற்ற முந்தைய தலைவர் நீதிபதி சுதான்சு ஜோதி முகோபாத்யாவை பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நீதிபதி பன்சி லால் பட் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக உள்ளார்.

எஸ் வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டார்

SBI முன்னாள் வங்கியாளர் பிரசாந்த் குமாரை நிதி சிக்கலில் உள்ள எஸ் வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக மத்திய அரசு நியமித்துள்ளது.

  • குமாரைத் தவிர, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவர் சுனில் மேத்தா, எஸ் வங்கியின் நிர்வாகமற்ற தலைவராக பொறுப்பேற்பார். மற்ற வாரிய உறுப்பினர்களில் மகேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதுல் பேடா இருவரும் நிர்வாக இயக்குநர்களாக உள்ளனர்.

விளையாட்டு செய்திகள்

ஓமான் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆச்சந்தா ஷரத் கமல் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்

டேபிள் டென்னிஸின் வீரர் , அச்சந்தா ஷரத் கமல் ஐடிடிஎஃப் சேலஞ்சர் பிளஸ் ஓமான் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார். மஸ்கட்டில் நடந்த இறுதிப் போட்டியில் போர்ச்சுகலின் மார்கோஸ் ஃப்ரீடாஸை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினார்.

முக்கிய நாட்கள்

உலக நுகர்வோர் உரிமை தினம் மார்ச் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது

நுகர்வோர் இயக்கம் நுகர்வோர் உரிமைகள் மற்றும் தேவைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான  வழியாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

  • இந்த ஆண்டு உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தின் கருப்பொருள்  “நிலையான நுகர்வோர்” என்பதாகும்.

தேசிய தடுப்பூசி நாள்: மார்ச் 16

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 ஆம் தேதி, தேசிய தடுப்பூசி தினத்தை இந்தியா அனுசரிக்கிறது. இந்த நாள் தேசிய நோய்த்தடுப்பு நாள் என்றும் அழைக்கப்படுகிறது.

  • மேலும் மார்ச் 16 ஆம் தேதி இந்த நாள் அனுசரிக்கப்படுவதற்கான காரணம் 1995 ஆம் ஆண்டில் இந்த நாளிலேயே, போலியோவுக்கு எதிரான வாய்வழி தடுப்பூசியின் முதல் டோஸ் இந்தியாவில் வழங்கப்பட்டது.

பிற செய்திகள்

செக் குடியரசின் ஈட்டி எரியும் வீராங்கனை டானா சடோப்கோவா காலமானார்

ஒலிம்பிக் ஜாவெலின் சாம்பியனாக இருந்த டானா சடோப்கோவா காலமானார்.

  • அவர் 1952 இல் ஹெல்சின்கி ஒலிம்பிக்கிலும், 1960 இல் ரோமில் ஒலிம்பிக் வெள்ளி வென்றார்.
  • 1958 ஆம் ஆண்டில், தனது 35 வயதில் 55.73 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்தார்.
  • அவர் 1960 இல் பயிற்சியாளராக பணியாற்றினார் மற்றும் 1980 இல் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

Download Today Complete CA in Tamil

CA One Liners in Tamil

Attend Yesterday CA Quiz Here

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!