தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் Ph.D 2023 -2024 சேர்க்கை – விண்ணப்ப விவரங்கள் வெளியீடு!

0
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் Ph.D 2023 -2024 சேர்க்கை - விண்ணப்ப விவரங்கள் வெளியீடு!
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் Ph.D 2023 -2024 சேர்க்கை - விண்ணப்ப விவரங்கள் வெளியீடு!
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் Ph.D 2023 -2024 சேர்க்கை – விண்ணப்ப விவரங்கள் வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் Ph.D படிப்பிற்கான சேர்க்கை விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNTEU Ph.D சேர்க்கை:

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துறைகள் மற்றும் இதனுடன் இணைந்த கல்வியியல் கல்லூரிகளில் ஜூலை 2023 அமர்வுக்கான Ph.D பட்டம் பெறுவதற்கான தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnteu.ac.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். OC / OBC பிரிவினர் ரூ.1000 மற்றும் SC / ST பிரிவினர் ரூ.750 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் 8. 9. 2023 மாலை 5 மணிக்குள் முன்பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். UGC/TNTEU விதிமுறைகளின் படி நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் UGC / JRF/ NET / SELT / M.Phil in Education போன்ற கல்வி தகுதி கொண்டவர்கள் மட்டும் நுழைவு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள். இருப்பினும் இவர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். விண்ணப்பதாரர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தையும் உடன் இணைத்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!