TNTET தேர்வு – பிஇ பட்டதாரிகளுக்கு வாய்ப்பு.. வலுக்கும் கோரிக்கை!

0
TNTET தேர்வு - பிஇ பட்டதாரிகளுக்கு வாய்ப்பு.. வலுக்கும் கோரிக்கை!
TNTET தேர்வு - பிஇ பட்டதாரிகளுக்கு வாய்ப்பு.. வலுக்கும் கோரிக்கை!
TNTET தேர்வு – பிஇ பட்டதாரிகளுக்கு வாய்ப்பு.. வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஆசிரியர்கள் நியமன தேர்வில் பிஇ பட்டதாரிகள் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நியமனத்தேர்வு:

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நியமன தேர்வானது 2024 ஜனவரி 7ம் தேதி நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு ஜனவரி 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் பிஇ முடித்து பிஎட் கல்வித் தகுதி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்படவில்லை.

இது குறித்து பேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழக அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு பிஇ பிடெக் முடித்த பட்டதாரிகள் கணிதம் இயற்பியல் பாடங்களில் கற்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவித்தது. அதன்படி பி.டெக் முடித்தவர்கள் 6/7 எட்டாம் வகுப்பில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க படலாம் இதனை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் நடக்க உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன தேர்வில் B.E பட்டதாரிகள் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

TNTET தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமா?? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!