
வார விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்பவரா நீங்கள்..? அப்போ போக்குவரத்து கழகம் அறிவித்த இந்த தகவல் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தொழில் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக தமிழகத்தின் பெருநகரமான சென்னையில் இடம் பெயர்ந்து வசித்து வருகின்றனர். மேலும், அவ்வப்போது வரும் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்தி தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர். இந்நிலையில் மார்ச் 8 மற்றும் 9 ஆம் தேதி வார விடுமுறை நாட்கள் என்பதால் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, “சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வருகின்ற மார்ச் 7 ஆம் தேதி அன்று 265 கூடுதல் பேருந்துகளையும், மார்ச் 8 ஆம் தேதி அன்று 270 கூடுதல் பேருந்துகளையும் இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. மேலும், சென்னை கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்தும் இந்த கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது”.


























