கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020 !
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிப்பார்வையாளர் /இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 09/12/2020 பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | கரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை |
பணியின் பெயர் | Overseer/Junior Drafting Officer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 09.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கரூர் மாவட்ட காலிப்பணியிடங்கள்:
பணிப்பார்வையாளர் /இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு 16 பணியிடங்கள் காலியாக உள்ளன.
TNRD Karur பணியின் தன்மை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை செய்து
முடித்தல் மற்றும் இதர அனைத்து திட்டப் பணிகளையும் மேற்பார்வையிடுதல்.
வயது வரம்பு:
2020 ஜுலை மாதம் 1ம் தேதி அன்று 35 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TNRD கரூர் ஊதியம்:
ரூ.35,400 – 1,12,400 என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவற்கு மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
TNRD கரூர் கல்வித் தகுதி:
DIPLOMA IN CIVIL ENGINEERING கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கான கல்வியினை முழு நேர அல்லது பகுதி நேர (Regular / Part time) படிப்பு முறையில் மட்டுமே பெற்றிருக்க வேண்டும். தொலைதூர கல்வி முறை (Distance Mode)) ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
TNRD விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), அறை எண்.203, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியரகம், கரூர்-639007 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ09/12/2020 (புதன் கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்