TNPSC குரூப் 4 தேர்வு – தமிழக வளர்ச்சி நிர்வாகம் முக்கிய கேள்விகள்!!

0
TNSPC குரூப் 4 தேர்வு - தமிழக வளர்ச்சி நிர்வாகம் முக்கிய கேள்விகள்!!
TNPSC குரூப் 4 தேர்வு – தமிழக வளர்ச்சி நிர்வாகம் முக்கிய கேள்விகள்!!

TNPSC தேர்வுகளில் மிகவும் முக்கியமான தற்போதைய காலத்துடன் ஒன்றக்கூடிய பாடம் UNIT – 9 பிரிவு. தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தின் சிறப்புகளைப் பற்றி அறிந்துக் கொள்வது தான் இப்பாடப்பிரிவின் நோக்கம். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட சில துறைகளின் கீழ் தமிழகத்தின் செயல்பாடுகள் மற்றும் நிலை குறித்த சில முக்கியமான கேள்விகளை அவற்றின் விடைகளுடன் இங்கே வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் படித்து பயன் பெறலாம்.

1) அரசு இணைய வழிச் சேவை (இ-சேவை) நடுவங்களின் நோக்கம் எது?

a) மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் இணைய வழிச் சேவைகளையும் ஒருங்கிணைத்து ஒரு பொதுத்தளத்தில் அணுகும் வகையில் வழங்குதல்.
b) மாவட்ட அளவிளான மின் ஆளுகைத் திட்டங்களுக்கு வழி காட்டுதல்.
c) இணையவழித் தேர்வுகளுக்கான சேவையினை வழங்குதல்.
d) தமிழ்நாட்டிற்கான குடியிருப்புத் தரவுகளை வழங்குதல்

விடை – A

2) தமிழ்நாட்டில் அனைத்து –சேவை திட்டங்களை அமல்படுத்தும் முதன்மை முகமை எது?

a) ELCoT
b) TAcTV
c) TneGA
d) NIC

விடை – C

3) அத்திகடவு – அவிநாசி திட்டம் என்பது கீழ்வருவனவற்றுள் எதனுடன் தொடர்புடையது?

(A) சொட்டு நீர் பாசனத்திட்டம்
(B) தெளிப்பு நீர் பாசனத்திட்டம்
(C) குடிநீர் மற்றும் கிணறுகள் செறிவூட்டும் திட்டம்
(D) குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்

விடை – D

4) இந்திய பொருளாதாரத்தில் கோவிட் பெருந்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறை (கள்)

(a) சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME)
(b) விமான போக்குவரத்து
(c) சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொடர்பான தொழில்கள்
(d) தொலை தொடர்பு துறை

(A) (a) மற்றும் (d) மட்டும்
(B) (a), (b) மற்றும் (c)
(C) (d) மட்டும்
(D) (a), (c) மட்டும்

விடை – B

5) தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையின் சிறப்புக் குணாம்சத்தை வெளிப்படுத்தும் சீரிய திட்டம்

a) மதிய உணவுத் திட்டம்.
b) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.
c) தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்.
d) தொழிற் பேட்டைகள்

விடை – B

Follow our Twitter Page for More Latest News Updates

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!