TNPSC Tamil Ilakkanam Peyarecham Vagai Arithal Study Material – Free PDF Download
TNPSC தமிழ் தகுதித் தேர்வு – பெயரெச்ச வகை அறிதல்
பெயரெச்சம் என்பது ஒரு வினைமுற்றாத சொல், அதாவது ஒரு வினைச் சொல் முழுமையாக இல்லாமல் மற்றொன்றோடு சேர்ந்து பொருளுரைக்கும் சொல் ஆகும். மேலும், வேறு வார்த்தைகளில் ஒரு வினைமுற்றாத சொல் பெயர்ச்சொல்லால் முடிந்து, பெயர்ச்சொல்லின் தன்மையை விளக்கினால் அது பெயரெச்சம் என கூறப்படுகிறது. இந்த பெயரெச்சத்தின் மூலம், ஒரு செயலைச் செய்தவர், செய்பொருள் மற்றும் செயலின் நேரம் போன்ற பல விஷயங்களை விளக்க முடியும்.
இதை தொடர்ந்து, “பெயரெச்சத்தைக் காலத்தின் அடிப்படையில், தெரிநிலை, குறிப்பு, எதிர்மறை மற்றும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என 4 வகைப்படுத்தப்பட்டுள்ளன”. அதாவது, “காலத்தை வெளிப்படையாகக் காட்டும் பெயரெச்சம், தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும். இதுவே பெயர் அடியாகப் பிறந்து, காலத்தைக் குறிப்பாக உணர்த்தும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படுகிறது. மேலும், ஒரு வினைச்சொல் ‘இல்லை’ என்ற பொருளில் வரும் போது, அந்த வினைச்சொல் எதிர்மறைப் பெயரெச்சமாக கருதப்படுகிறது. இறுதியாக ஈற்றெழுத்து கெட்டு வரும் எதிர்மறைப் பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாகும். இது “ஆ” எனும் விகுதியில் முடியும்”.
TNPSC Tamil Ilakkanam Study Materials – Free PDF Download
தெரிநிலைப் பெயரெச்சம் எடுத்துக்காட்டுகள்
| படித்த | பையன் |
| படிக்கின்ற | பையன் |
| படிக்கும் | பையன் |
| படித்த | கல்லூரி |
| படித்த | பொழுது |
| சிவந்த | கண் |
| வெளுத்த | பச்சை |
| பாடிய | பாட்டு |
குறிப்புப் பெயரெச்சம் எடுத்துக்காட்டுகள்
| நல்ல | மாணவன் |
| எரிந்த | காடு |
| வீழ்ந்த | பணம் |
| மாட்டிய | கயிறு |
| அழைத்த | சிறுவன் |
| பறந்த | பறவை |
| பாடிய | மாணவன் |
| எடுத்த | பொருள் |
| ஓடும் | வண்டி |
| முடிந்த | செயல் |
எதிர்மறைப் பெயரெச்சம் எடுத்துக்காட்டுகள்
| பேசாத | வாய் |
| பார்க்காத | கண் |
| ஓடாத | குதிரை |
| நடவாத | கால்கள் |
| கேளாத | செவி |
| பரவாத | செய்தி |
| பெய்யாத | மழை |
| விடியாத | பொழுது |
| புரியாத | புதிர் |
| பாயாத | வேங்கை |
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எடுத்துக்காட்டுகள்
| பாடா | பைங்கிளி |
| பொய்யா | மொழி |
| வாடா | மலர் |
| சிந்தா | மணி |
| மாறா | அன்பு |
| செல்லா | காசு |
| தேரா | மன்னா |
| தாங்க | வேட்கை |
| புணையா | ஓவியம் |
| நாரா | மலர் |


























